போட்டியாளர்களுக்கு செக் வைத்த பிக் பாஸ்…என்ட்ரி கொடுக்கும் மூன்று வைல்டு கார்டு கன்டஸ்டன்ட்ஸ்.!

Bigg Boss Tamil Season 7

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கிய போது, 18 போட்டியாளர்களுடன் மந்தமாக சென்ற நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களால் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இப்பொது, எட்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் வைல்ட் கார்டு போட்டியாளரான கானா பாலா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். கடந்த வாரம் ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் தொடக்க நாளிலியே வீட்டிற்குள் இருக்கும் எல்லா போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் அவர்கள் பெரிய டாஸ்கை கொடுத்திருக்கிறார். அதாவது, இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு  போட்டியாளர்கள் வீட்டிற்குள் வரவுள்ளனர்.

ஏற்கனவே, வீட்டிற்குள் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தனர். தற்போது, மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கவிருக்கும் நிலையில், உள்ளே இருக்கும் 14 போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது.

இதில் வெற்றிபெற்றால், மட்டுமே அந்த மூன்று புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வரமாட்டார்கள். ஆனால், இந்த போட்டியில் தோற்று போனால், புதிதாக மூன்று வைல்டு கார்டு நபர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என்றும், தொற்று போன மூவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, கொடுக்கப்படும் மூன்று போட்டியில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வெல்ல போகிறார்களா? இல்லை வெளியே இருந்து வரும் போட்டியாளர்களுக்கு வழிவிட போகிறார்களா? என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்