இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.!

Published by
செந்தில்குமார்

புது டெல்லியில் நேற்று நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய அவர், இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று  கூறியுள்ளார்.

உள்ளூர் மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை என்றும், அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என்றும்  கூறினார். மேலும், பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் காலனித்துவ அடையாளங்களை அழிப்பது உள்ளிட்ட ஐந்து உறுதிமொழிகளை ஊக்குவிப்பதை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாகஇருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று அமித்ஷா பேசியுள்ளார். இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது, இந்தித்திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில் நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டத்தில், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் 12வது தொகுதி அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

8 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

9 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

10 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

12 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

12 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

13 hours ago