உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி – மு.க. ஸ்டாலின்

Published by
Venu

உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசனச் சட்ட அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

  • தி.மு.க., வின் சமூக நீதிக் கொள்கைக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது.
  • ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூகநீதி சிந்தனையுடன் செயல்படும் பேரியக்கம். 7.6.1971 அன்று  பட்டியலின- பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18% உயர்த்தியவர் கலைஞர்.
  • 22.6.1990 அன்று 18% இட ஒதுக்கீடு பட்டியல் இனத்திற்கு தனியாக 1% பழங்குடியின மக்களுக்கு என 19% ஆக உயர்த்தியது முத்தமிழறிஞர் தான்.
  • பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட (BC, MBC இட ஒதுக்கீட்டையும் சேர்த்து- 69% இட ஒதுக்கீடுடன்  தனித்துவம் பெற்று நிற்கிறது தமிழகம்.
  • 23.1.2008 அன்று சமூக பொருளாதாரத்தில் அடித்தளத்தில் அருந்ததியர் இருப்பதால் அவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது’ என அறிவித்தது கலைஞர் அரசு.
  • 27.11.2008 அன்று அருந்ததியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 3% இட ஒதுக்கீடு வழங்கி அமைச்சரவை தீர்மானம் இயற்றியது தி.மு.க அரசு.
  • சட்ட முன்வடிவுக்கான கலைஞரின் உரையை உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் அவையில் எடுத்துரைத்தேன்.
  • 29.4.2009 அன்று  இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டது இன்றுவரை அருந்ததியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்தில் அந்த உள் ஒதுக்கீடு ஒரு வரப்பிரசாதம்.
  • அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தி.மு.க சார்பில் நன்றி.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

11 minutes ago

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

4 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

4 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

5 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

6 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

6 hours ago