பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!
ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் மறைவிற்கு பிறகும் கட்சியை வழிநடத்துபவர் அன்புமணிதான் என ஜி.கே.மணி பேசியிருக்கிறார்.

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாமக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது. ஆனால், இந்த கூட்டத்தை கட்சி தலைவர் அன்புமணி தொடர்ச்சியாக கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருவதால் பாமக கட்சிக்குள்ளே குழப்பங்கள் நிலவுகிறது.
இதனையடுத்து ஏற்கனவே, ” பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது என்பது உண்மை தான். கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இந்த விவகாரம் விரைவில் சரியாகும் என நான் நம்புகிறேன். ராமதாஸ், அன்புமணி இடையேயான பிரச்சினையை தீர்க்க இரவு பகலாக முயற்சிக்கிறேன். அவர்களின் இடையே கூட்டணி தொடர்பாக எந்த மோதலும் இல்லை” என கட்சியின் கௌரவத் தலைவர் ஜிகே மணி விளக்கம் அளித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த சூழலில், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய அங்கமான வன்னியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கௌரவத் தலைவர் ஜிகே மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூத்தா அருள்மொழி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த கட்சியினுடைய கௌரவத் தலைவர் ஜி.கே. மணி வழக்கம் போல இன்றும் செய்தியாளர்களை சந்தித்து சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர் ” இந்த கட்சி வளர்வதற்கு ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரை பல பேர் எவ்வளவு தியாகங்களை செய்திருக்கிறார்கள் என்று சொல்லியே தெரியவேண்டாம். சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துள்ளனர். அடித்தட்டு மக்களுக்கான கட்சியாக தொடர்ந்து அவர்களது முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வருகின்ற கட்சியாக பாமக இருக்கிறது.
அதனை தொடர்ந்து பேசிய அவர் ” கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் மறைவிற்குப் பிறகும் இந்த கட்சியை வழி நடத்துபவர் அன்புமணி ராமதாஸ்தான். ராமதாஸுடன் சேர்ந்தும் சரி, அவரது காலத்திற்கு பிறகும் சரி, பாமக நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டன் வரை, அன்புமணியை மட்டுமே முன்னிலைப்படுத்துவார்கள்” எனவும் பேசிவிட்டு சென்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!
May 19, 2025