எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!
சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் கூறியுள்ளார்.

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் பெய்த கோடை மழையின் அளவு எவ்வளவு? இனிமேல் எப்போது மழை பெய்யும்? தென்மேற்கு பருவமழை எந்தெந்த பகுதிகளுக்கு பரவும்.? என்கிற கேள்விகளுக்கு தமிழ்நாடு வானிலை அறிக்கையின் மேப் மூலம் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கும் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது. மார்ச் 1 முதல் தற்போதுவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் மகர் அளவு 10 செ.மீ தான், ஆனால், 19.2 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் இயல்பைவிட 83% அதிக மழை பெய்துள்ளது. இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 4 செ.மீ, ஆனால் 7.4 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் நாளை (மே 20) கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நீலகிரிக்கு நாளை அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.