Annamalai, BJP State president [Image source : ANI]
திமுக, தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா அல்லது கூட்டணிக் கட்சிகள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை இன்றி வந்து கொண்டிருந்த காவிரி நீரைத் திறந்து விடாமல் நிறுத்தியிருக்கிறார்கள்.
காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராடிய விவசாயிகள் சங்கத்தினரையும், தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா அல்லது கூட்டணிக் கட்சிகள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். திமுகவின் கூட்டணிக் கட்சி என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுகவால் உருவாக்கப்பட்டு, நெடுங்காலமாக இருந்து வந்த காவிரிப் பிரச்சினைக்கு, பாரத பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால்தான் தீர்வு கிடைத்தது. தற்போதும், தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
திமுக, தங்கள் தனிப்பட்ட பலன்களுக்காக, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்? உடனடியாக, தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து…
சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக,…
சென்னை : தென்னிந்தியபகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி -…
ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு…
பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ''தூங்கும் இளவரசர்'' என்று…
ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…