புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா.? திமுக கண்டனம்..!

Published by
murugan

புதுச்சேரி பேரவைக்கு தேர்வானவர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றி புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது.

இதற்கிடையில், புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அந்த 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள், இதனால், தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது.

3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில் புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா.? புதுச்சேரி மக்களின் தீர்ப்பை பாஜக மாசுபடுத்த வேண்டாம்.

புதுச்சேரி பேரவைக்கு தேர்வானவர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்திற்கு விரோதமான பாஜகவின் நடவடிக்கைக்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10, பாஜகவுக்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இரு கட்சிக்கு கிட்டத்தட்ட 1 எம்.எல்.ஏ தான் வித்தியாசம். புதுச்சேரியில் 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளதால் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் எந்த நேரமும், எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

10 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

11 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

12 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

13 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

16 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

16 hours ago