காவலருக்கு மன அழுத்தம் இருப்பதாக அரசு சொன்னதைப் போல, அந்தத்துறையின் அமைச்சரான முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது.கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார். நடைபெற்ற விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்ட நிலையில் நேரில் ஆஜராகினார்கள் .அப்பொழுது நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. மன அழுத்தம் காரணமாக மாஜிஸ்திரேட்டை போலீசார் அவமதிக்கும் விதத்தில் பேசிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சி தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியபோது, தந்தை – மகன் இருவரும் விடிய விடிய தாக்கப்பட்டதாகவும், இதனால் காவல்நிலையத்தில் உள்ள மேஜை மற்றும் லத்தியில் ரத்தக் கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது : மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவாக பேசி மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்கு கொடுத்தது யார் என்பதை பழனிசாமி அரசு விளக்க வேண்டும்
மாஜிஸ்திரேட்டிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்ட காவலருக்கு மன அழுத்தம் இருப்பதாக அரசு சொன்னதைப் போல, அந்தத்துறையின் அமைச்சரான முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா?
நீதிபதிகள் அச்சம் தெரிவித்திருப்பதைப் போன்று தலைமைக்காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் அழிக்கவோ, மாற்றவோ இடம் கொடுக்காமல் இருப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…