#BREAKING: தேமுதிகவுடன் அமமுக கூட்டணியா..? இல்லையா ..? இன்று முடிவுக்கு வரும்- டிடிவி தினகரன்..!

அமமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் கோவில்பட்டியில் போட்டியிடுகிறேன். மக்கள், தொண்டர்களை நம்பியே களத்தில் நிற்கிறோம். நிச்சயம் கோவில்பட்டி தொகுதி மக்கள் வெற்றியை தருவார்கள். அமமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று முடிவுக்கு வரும், தொகுதிகளின் எண்ணிக்கை கூட்டணி முடிவான பிறகே வெளியிடப்படும் என தெரிவித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் 234 தொகுதிகளில் நீங்கள் 2 தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. அதில் ஒரு தொகுதி அறிவிக்கப்பட்ட நிலையில் மற்றோரு தொகுதி என்ன என கேள்வி எழுப்பியதற்கு, இன்று தெரியவரும் இன்று 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வர வாய்ப்புள்ளது என தினகரன் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025