#ElectionBreaking: சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்.!

Default Image

சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, திமுகவில் காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, மமக 2, த.வா.க. 1, ம.வி.க. 1, ஆதித்தமிழர் பேரவை 1, பார்வார்டு பிளாக் கட்சி 1 என 61 தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதில் குறிப்பாக வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. சில கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மந்தம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, கூட்டணி கட்சிகளை சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்று பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. பின்னர் திமுக கூட்டணி கட்சிகள் தங்களது தொகுதிகளை அதிகாரப்பூர்வமாகவே நேற்று அறிவித்திருந்தன. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் வரும் சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், இரு தரப்பினருக்கும் வரும் தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஒரு பெரிய சவால்களுடன் கூடிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் பதவியேற்ற பிறகு முக ஸ்டாலினுக்கு இதுதான் முதல் சட்டமன்ற தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.  கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவ படத்திற்கு முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய பின், கலைஞர் நினைவிடம் சென்று வேட்பாளர் பட்டியல் வைத்து மரியாதையை செலுத்தினார். இதன்பின் அண்ணா அறிவாலயம் வந்த முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு – பத்மநாபபுரம் மனோ தங்கராஜ், ஆலங்குளம் பூங்கோதை, சங்கரன்கோவில் ராஜா, நாகர்கோவில் சுரேஷ்ராஜன், திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சுழி தங்கம் தென்னரசு, கம்பம் ராமகிருஷ்ணன், போடி தங்கத்தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி கீதா ஜீவன், முதுகுளத்தூர் ராஜ கண்ணப்பன், மதுரை மத்தி பழனிவேல் தியாகராஜன், திருமயம் ரகுபதி, ராதாபுரம் அப்பாவு, கன்னியாகுமரி ஆஸ்டின், குன்னம் எஸ்.எஸ்.சிவசங்கர்.

பாளையங்கோட்டை அப்துல் வஹாப், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, நன்னிலம் ஜோதி ராமன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், நெல்லை சபா ராஜேந்திரன், பழனி ஐ.பி.செந்தில்குமார், தொண்டாமுத்தூர் கார்த்திகேய சிவசேனாதிபதி, கரூர் செந்தில்பாலாஜி, ஆத்தூர் ஐ.பெரியசாமி, எடப்பாடி சம்பத்குமார், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் பூண்டி கலைவாணன், மணச்சநல்லூர் கதிரவன், காங்கேசம் சாமிநாதன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெயதீசன்.

மாதாவரம் சுதர்சனம், மதுரவாயல் கணபதி, சைதை மா.சுப்பிரமணியன், அண்ணாநகர் மோகன், ஆயிரம் விளக்கு மருத்துவர் எழிலன், சேப்பாக்கம் உதயநிதி ஸ்டாலின், பெரம்பூர் – ஆர்.டி.சேகர், ஆலந்தூர் – தா.மோ.அன்பரசன், ஆவடி – நாசர், துறைமுகம் – சேகர் பாபு, எழும்பூர் – பரந்தாமன், வில்லிவாக்கம் – வெற்றியழகன், காட்பாடி துரைமுருகன், அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன், முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன், செஞ்சி – மஸ்தான்.

ஆலங்குளம் பூங்கோதை, நெல்லை லட்சுமணன், திருச்செந்தூர் அனிதா, கும்பகோணம் – அன்பழகன், லால்குடி – செளந்தர பாண்டியன், தொண்டமுத்தூர் கார்த்திகேய சிவசேனாதிபதி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். அதற்காக வரும் 15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன் என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் எனவும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts