தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வன்னியர்களுக்குக்கான 10.5% உள்இட ஒதுக்கீடு ரத்துக்கு திமுகவே காரணம். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதடவில்லை. அதேபோல இந்த வழக்கில் முழு தரவுகளை(விவரங்கள்) அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை.
அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக அரசு செயல்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டது ஒரு கண்துடைப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்த அரசு அதிகாரியை ஒரு அமைச்சர் ஜாதி சொல்லி திட்டுகிறார். அந்த அதிகாரி மனமுடைந்து ஊடகங்கள் மூலமாக தனது மன அழுத்தத்தை தெரிவிக்கிறார். அவரை பதவியிலிருந்து நீக்காமல் வேறு துறைக்கு முதல்வர் மாற்றியிருக்கிறார்.
எப்போது பார்த்தாலும் சமுகநீதிக்கு பாடுபடுவதாக முதல்வர் கூறுகிறார். இதுதான் சமூக நீதியா..? இங்கேயே சமூக நீதியை பாதுகாக்க முடியவில்லை. இவர் இந்தியா முழுவதும் சமூக நீதியை பாதுகாக்க போகிறாராம். தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…