தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள தேர்தல் பரப்புரையின் தலைப்பு ராகுலின் தமிழ் வணக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று “ராகுலின் தமிழ் வணக்கம்” தமிழகத்தில் தொடங்க உள்ளது.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்..இந்த வருகையின் மூலமாக இந்தியா முழுவதும் போராடி வருகின்ற விவசாயிகளுக்கு ஒரு தார்மீக ஆதரவை ராகுல் காந்தி தர இருக்கிறார்.மோசமான ஆட்சியை தூக்கி எறிய ராகுலின் தமிழ் வணக்கம் நிகழ்ச்சி அச்சாரமாக அமையும்.விவசாயிகளிடம் ராகுல் காந்தி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக உள்ளது.காங்கிரஸிற்கான தொகுதிகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…