நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல – தமிழிசை

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை நீட் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை மாணவியின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்கிறேன் என்றும் ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும் என்று தெரிவித்தார்.
இதன்படி சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி ஜீவிதாவை நேரில் சந்தித்து முதற்கட்டமாக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார் தமிழிசை சௌந்தரராஜன்.
பின்னர் அவர் கூறுகையில்,நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் கல்விச் செலவை ஏற்றது விளம்பரத்திற்காக அல்ல. நீட் தேர்வு பற்றி அவநம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவே எதிர்க்கட்சியினர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
நீட் தேர்வு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை அரசியல் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025