முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாநண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர் பாட்டியல் அறிவித்து, தேர்தல் பிரச்சாரம் போன்ற பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மார்ச் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று, சேரன் மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் அவருக்கு ரூ.240 கோடி உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது நண்பர் மாரிச்செல்வம் வீட்டில் நள்ளிரவில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்பட்டிருப்பாதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாகவும், ஆனால், இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என கூராடுகிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…