முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆறுமுகசாமி ஆணையம்
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இவரது மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.
ஓபிஎஸ்-க்கு சம்மன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவியும் இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஓபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிறார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…