சில தினங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் இருளப்பசாமி என்பவர் ஜீவசமாதி அடைவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் செய்திருந்தனர். அவர் ஜீவசமாதி அடைய போவவதாக செய்தி சுற்று வட்டாரத்தில் பரவியத்தன் பேரில், வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். ஆனால், அன்றைய தினம் அவர் ஜீவசமாதி அடைவதில் இருந்து பின்வாங்கி விட்டார்.
இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருக்கிறது. அது நிறைவேற்றிவிட்டு வேறு நாளில் ஜீவசமாதி அடைய போவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.
இந்நிலையில், தற்போது கைது செய்து அவரிடம் காவல்துறை விசாரிக்கையில், இந்த ஜீவசமாதி காண ஏற்பாடு அனைத்து ஏற்பாடுகளையும், தனது மகன் கண்ணாயிரம் தான் செய்தான் என அவர் ஒப்புக் கொண்டார். இந்த விசாரணையினை அடுத்து, கண்ணாயிரம் மற்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது மக்களை ஏமாற்றுதல், அனுமத்தியின்றி உண்டியல்வைத்து வசூல் செய்தல் போன்ற குற்றங்கள் உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…
பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…
மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…
உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…
லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை…