அரசின் அறிவுறுத்தலை மீறி வட்டி செலுத்த வற்புறுத்தினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இறுதிப்பட்டியல் பயனாளிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் என்றும், அரசின் அறிவுறுத்தலை மீறி வட்டி செலுத்த வற்புறுத்தினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…