மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.
ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரும் அக்டோபர் 2-வது வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்நிலையில் நினைவிடத்தில் ராட்சத அளவிலான பீனிக்ஸ் பறவை போன்ற வடிவம் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் மெருகேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், ‘50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள இடத்தில் அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. சமாதி அருகில் வெள்ளை பளிங்கு கற்களால் தரைதளம் அமைக்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது. நினைவிடத்தில் சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்த பீனிக்ஸ் பறவை அமைப்பு 15 மீட்டர் உயரத்தில் தலா 21 மீட்டர் நீளத்தில் 2 ராட்சத சிறகுகளை விரித்தப்படி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. நினைவிடம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் மெருகேற்றும் இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…