தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடும் நிலையில்,இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து,பின்னர்,புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர்.
மேலும்,2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி(திருத்த) சட்ட முன்வடிவு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு நவீன படகுகள் வாங்குவது குறித்து எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,தமிழக சட்டப்பேரவை விதி எண் 110 இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…