சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடலை இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி.
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து & வந்தே மாதரம் பாடல்களையும் இசைக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் கூறுகையில், அனைத்து இந்திய மொழிகள், கலாச்சாரங்களையும் போற்றுவதே மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் சம்ஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபோன்று 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற 58வது பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டது சர்ச்சையானது. இதனைத்தொடர்ந்து திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த டிசம்பர் மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடலை இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…