அரசு ஊழியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு என அறிவிப்பு.
ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, பள்ளிக்கல்வித்துறை தனி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆண்டுதோறும் 15 நாட்கள் அல்லது 2 ஆண்டுகளில் 30 நாட்களுக்கு உரிய ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறை உள்ளது.
இந்த நடைமுறைக்கு மாநில அரசின் கீழ் வரும் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், மற்றும் சங்கங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதிச் சிக்கல்களால் ஈட்டிய விடுப்பினை சரண் செய்து அளிக்கும் திட்டம் கடந்த மாா்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனால் ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணமாகப் பெறும் திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிர்பார்த்து காத்திருந்தனா். ஆனால், மறு உத்தரவு வரும் வரை இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா் சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில், மீண்டும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…