இந்தி மொழி விவகாரம், CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஏப்ரல் 10-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், மத்திய பல்கலை கழகங்களில் நுழைவு தேர்வினை புகுத்தி, தனியார் பயிற்சி மைய வணிகத்தை ஊக்குவிப்பதை கண்டித்தும் தமிழக முழுவதும் ஏப்ரல் 19 ஆர்ப்பாட்டம் நடைபெறும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அண்மையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தி தான் இந்தியாவின் மொழி’, ‘இந்தி இணைப்பு மொழியாகும் தருணம் வந்துவிட்டது’ என்றுள்ளார். மாநிலங்களுக்குள் இனி கடிதப் போக்குவரத்து இந்தியில்தான் இருக்க வேண்டுமெனவும் முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் அரசமைப்பு சட்டம் அவமதிக்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தும் முயற்சியே அமித் ஷா-வின் பேச்சு. அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டும்.
அந்த நிலை வரும்வரை இரு மொழிக் கொள்கை தான் இருக்கும், இந்தியை திணிக்க முடியாது. எம் மொழியையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு இல்லை. ஆனால் ஒரு மொழியைத் தூக்கிப் பிடிப்பதற்காக அனைத்து மொழிகளையும் மிதிப்பதற்கு ஒன்றிய அரசு முயற்சித்தால் அதற்கு கிஞ்சித்தும் இடமளிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…