நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 12-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொரோனா காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று கே.பாலகிருஷ்ணன் குணமடைந்துள்ளார்.
இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் இன்று குணமடைந்து இல்லம் திரும்பிவிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சையளித்த டீன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அதேபோல் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…