திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி, முழு உடல்நலம்பெற்று மீண்டுவந்து, பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.
சென்னை : கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றானது உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் அவரது மனைவி மேனகாவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம்பெற்று மீண்டுவந்து, பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…