தமிழகத்தில் நடந்து முடித்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர மற்ற 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது.வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து செய்தது.
பின்னர் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 05 தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் எனவும் , 09 தேதி தேர்தல் முடிவு என அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 18-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் , திமுக சார்பில் கதிர் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர்.
வேலூர் தொகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. இதை தொடர்ந்து கடந்த 05 தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இதில் தபால் ஒட்டு எண்ணப்பட்டதில் இருந்து முதல் நான்கு சுற்று வரை ஏ.சி சண்முகம் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து மூன்று மணி நேரம் முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகத்தை பின்னுக்கு தள்ளி கதிர் ஆனந்த் முன்னேறினார்.
17,000 வாக்குகள் வித்தியாசத்தில் இருந்த கதிர் ஆனந்த் அதன் பின்பு 10,000 வாக்குகளாக குறைந்து யாருக்கு வெற்றி என்பது தெரியாமல் பரபரப்பு ஏற்பட்டது.இறுதியாக திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 9,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…