கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.. புதிய பயனாளிகள் சேர்ப்பு! தகுதியற்றவர்கள் நீக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் கூடுதலாக 5,041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பொதுமக்களுக்கு 100 ரூபாய் பணம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இம்மாதம் 15ம் தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாளைக்கு முன்பாகவே மக்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இதனிடையே, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, பிறகு தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சமயத்தில், இந்த திட்டத்திற்கு தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அரசு அறிவித்து இருந்தது. தமிழக அரசு அறிவிப்பின் படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை! இம்மாதத்துக்கான ரூ.1000 செலுத்தும் பணி தொடக்கம்!:

இதுவரை 9 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் கூடுதலாக 5,041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு செய்ததில் தகுதியான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்ட 5,041 பேர் புதிதாக திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபோன்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயனாளிகளின் இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் 8,833 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 1,06,48,406 பேருக்கு ரூ.10,64,84,06,000 உரிமைத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

40 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

4 hours ago