கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 15 க்கு பின் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ளவர்களின் வீடுகள் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதனை குறிப்பிடும் வகையில் அந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
அவ்வாறு நோட்டீஸ் ஒட்டிய வீட்டில் உள்ள யாரும் குறிப்பிட்ட நாள் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டிலும் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை நிலவி வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து, கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஊழியர், ‘ வெளிநாடு செண்டு வந்தவர்களின் பாஸ்போர்ட் முகவரியை கொண்டு இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட்டில் இருந்த பழைய முகவரி கொண்டு தவறுதலாக கமல்ஹாசன் வீட்டில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது.’ என விளக்கம் அளித்தார். பின்னர் அந்த கொரோனா நோட்டீஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…