கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இரண்டு நாள்களுக்கு முன் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அதில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சோமசுந்தரம் என்பவர் அந்த வீடியோவை பதிவு செய்தவர் எனவும், குகன் என்பவர் அந்த வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இவர்கள் பின்னணியில் உள்ளவர்களை குறித்து விசாரிக்க இருப்பதால் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…