இன்று பொன்.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக. சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பொன்.ராதாகிருஷ்ணன் இடைத்தேர்தலுக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் இதுவரை பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே போட்டியிட்டுள்ளார். 7 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 5 முறை தோல்வியை தழுவியுள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…