[Image Source : Twitter/@TNDIPRNEWS]
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி, மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் கருணாநிதி. புகழ்பாடும் விழாவாக மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கு அவர் செய்தவற்றை நினைவுபடுத்தும் விழாவாக இருக்கும்.
தமிழ் சமுயாதற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி. எனது தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும், கருணாநிதியின் புகழுக்கும் காணிக்கையாக்கிறேன். சென்னையில் டைடல் பார்க்கை உருவாக்கி தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி. 1997-ல் டைடல் பூங்காவை ஏற்படுத்தி புரட்சியை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதி உலக தமிழர்களின் சொத்து. உலக தரத்தில் சென்னையில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும், 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் உலக தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். மேலும், ஜப்பான், சிங்கப்பூரில் மேற்கொண்ட பயணத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்தியாவில் தொழில் தொடங்கினால் தமிழகத்தில் தான் முதலீடு செய்வோம் என்று நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளனர் எனஉரையாற்றினார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…