vairamuthu [Imagesource : Indianexpress]
கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து இருந்தார்.
தீபாவளி இரவு… கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பு.!
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து கையெழுத்திட்டார். அதன்பின் பேசிய அவர், நீட் தேர்வு சமூகத்துக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது, மாணவர்களுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக இளைஞர் அணியினரின் நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில், தனது கையெழுத்தும் இடம் பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளதோடு, தேர்வெழுதி மாணவர்கள் வாழ்நாள் கலந்து முடிகிறது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘நீட் விலக்கு நம் இலக்கு’ இயக்கத்தில் நானும் கையொப்பமிட்டேன். “நீட் என்பது கல்விபேதமுள்ள தேசத்தில் ஒரு சமூக அநீதி என்றேன். நீட்தேர்வு மருத்துவத்தில் சேர்த்துவிடுவதற்கு மாறாகச் சிலரை மரணத்தில் சேர்த்துவிடுவதை அனுமதிக்க முடியாது என்றேன் நீட் விலக்கு மசோதாவில் குடியரசுத் தலைவர் கையொப்பமிட வேண்டும் மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தேன் என பதிவிட்டுள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…