இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை.
இரட்டை இலை சின்ன பெற்று தருவதற்கு லஞ்ச கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீட்டில் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்தவர் வழக்கறிஞர் கோபிநாத்.
டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கோபிநாத்தை தொடர்புகொண்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை இலை வழக்கில் கோபிநாத் வீட்டில் ஏற்கனவே போலீஸ் சோதனை நடத்தியிருந்தது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நடத்தி வருகிறது. இந்த நிலையில் லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்தாக கூறப்படும் முக்கிய சாட்சிய வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…