காங்கிரசில் இருந்து விலகிய குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார்.
நடிகையாக இருந்த குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.இதன் பின் திமுகவில் இருந்து விலகி கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார் குஷ்பு .அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டது.சமீப காலமாகவே காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.மேலும் பாஜகவில் இணையவே டெல்லி சென்றார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை அக்கட்சியின் தலைமை நீக்கம் செய்வதாக அறிவித்தது.
எனவே இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் .அவரது கடிதத்தில் , கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும்,மூத்த தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என்றும் மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் என்னை அடக்கி வைத்தனர்.காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதகாக அக்கடிதத்தில் குஷ்பு தெரிவித்தார்.இந்நிலையில் காங்கிரசில் இருந்து விலகிய குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார்.டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…