கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஆதிதிராவிட காலனியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி இருந்த 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளில் விழுந்து உள்ளது. கனமழை பெய்து கொண்டு இருந்ததால் அருகில் இருந்தவர்களுக்கு எந்தவித சத்தமும் கேட்கவில்லை.
இதை தொடர்ந்து அக்கபக்கத்தினருக்கு காலை 5 மணி அளவில் தான் விபத்து நடந்தது தெரியவர பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.இந்த விபத்தில் சம்பவ இடத்திலே 17 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள சுற்று சுவர்களை இன்று இடிக்கப்படும் என ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் ,அந்த சுற்று சுவரை சுற்றி குடியிருப்புகள் இருப்பதால் மீதமுள்ள சுற்று சுவற்றை இடிக்க உள்ளோம்.
மேலும் அந்த சுற்று சுவர் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியத்தை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப் படுத்தி வருவதாகவும் , அவரிடம் விசாரணை நடத்தபட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…