சமூகவலைதள பக்கங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய பக்கங்களில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி என்பவர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர் மீது, 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) – ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…