கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் போது பாதுகாவலர் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றச்சாட்டப்பட்ட நிலையில் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். பின்னர், இந்த வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி இந்த வழக்கில் கூடுதலாக சில தகவல்கள் கிடைத்து இருப்பதாக மேலும் ஒரு முறை விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். பின்னர், போலீசார் ஆகஸ்ட் 16-ஆம் தேதி போலீசார் சயானுக்கு சம்மன் அனுப்பி 17-ஆம் தேதி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த]வழக்கில் நேற்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், இன்று புதியதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி.க்கள் சந்திரசேகர், சுரேஷ் மற்றும் ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க இதுவரை 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு எஸ்.ஐ உட்பட 5 போலீசார் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…