கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் விபத்தில் இறந்த கனகராஜ் பணிபுரிந்த உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோடநாடு வழக்கில் 10 நபர்கள் மீது குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அவர்களில் 4வது நபரான ஜம்ஷீர் அலியிடம் இன்று ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கோடநாடு விவகாரம் தொடர்பாக ஜாமினில் தளர்வுகள் கேட்ட வாளையார் மனோஜ் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது. ஜாமீனில் தளர்வுகள் கேட்ட மனு மீதான விசாரணையை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடைவிதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கோடநாடு வழக்கு தீவிரமடைந்துள்ளது. அதன்படி, இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு மேலும் துரிதப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்பது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…