திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுத்துகிறது.அதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை அடுத்து, கே.பி.ராமலிங்கம் திமுகவில் வகித்து வந்த விவசாய அணி மற்றும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பாக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக (சஸ்பெண்ட் ) திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.பின்பு கே.பி.ராமலிங்கத்தை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனிடையே இன்று தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்தித்துள்ளார்.இதனையடுத்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று தமிழகம் வரும் மத்திய அமைச்சரும்,பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…