Former ADMK Minister Jayakumar [File Image]
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புரட்சி தமிழர், கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம், நியாயம் வென்றுள்ளது. இதனை தமிழ்நாடு மக்களும், அதிமுக தொண்டர்களும் கொண்டாடப்படுகின்ற நாளாக மாறியுள்ளது.
ஒரு சிறப்பான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மனுக்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், பிரபாகர் ஆகியோரை அதிமுகவில் நீக்கியது செல்லும் என்ற அடிப்படையில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. குட்டு மேல் குட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி, ஓபிஎஸ் கிட்ட இருப்பது கட்சி இல்ல, அது ஒரு கோஷ்டி. மானம் உள்ளவர்களாக இருந்தால் அதிமுகவின் கரை வேட்டியை கட்ட கூடாது. அதுதான் மானமுள்ளவர்களுக்கு அழகு.
இதுபோன்று அதிமுக கொடி, ஜெயலலிதா, எம்ஜிஆர் தலைவர்கள் படங்களை பயன்படுத்த கூடாது. அதிமுக கொடி, கரை வேஷ்டியை ஓபிஎஸ் அணியினர் இனி பயன்படுத்தினால் அது சட்டவிரோதம். எனவே ஓபிஎஸ் இனிமேல் சினிமாவுக்கு நடிக்க போகலாம் என கடுமையாக விமர்சித்த அவர், ஓபிஎஸ் அணியினர் உச்சநீதிமன்றமே சென்றாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கட்சிகளில் அதிமுக மாநாடு போன்ற வேறு யாரும் நடத்தியதில்லை. அதிமுக தான் சரித்திரம் படைக்கு ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது. இனிமேல் இதுபோன்ற மாநாட்டை மற்ற கட்சிகள் நடத்த முடியாத வகையில் அதிமுக மாநாடு அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…