Virudhunagar [file image]
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப்போல, இந்த வெடிவிபத்தில் 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, சரக்கு வேனில் இருந்து குடோனுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இடம் மாற்றியதால் விபத்து ஏற்பட்டது எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து, விபத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, வெடி விபத்து ஏற்பட்ட இந்த கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.12 லட்சம் ரொக்கமாக ரூ.50 ஆயிரமும் காசோலையாக ரூ.11.50 லட்சம் என உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் நேரில் சென்று வழங்கப்பட்டது.
மேலும், இந்த வெடி விபத்து குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே, இந்த வழக்கில் நேற்று சேதுராமன் என்பவர் கைதான நிலையில், தற்போது தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…