மத்திய இணை அமைச்சர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக எல்.முருகன் சென்னை வருகை.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின் பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றனர்.
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், 43 புதிய மத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியானது. அதில் தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து, எல்.முருகன் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக எல்.முருகன் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இவரின் வருகையை தொடர்ந்து விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அண்ணாமலை பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…