சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் அதிமுக ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா? என முக ஸ்டாலின் பேச்சு.
வேலூர் மாவட்டத்தில் இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏதோ தேர்தலுக்காக மட்டும் வரும் ஸ்டாலினாக நான் வரவில்லை, எப்பொழுதும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன் என கூறினார்.
இந்த வட்டாரத்து மக்களுடைய எந்தக் கோரிக்கையையாவது கடந்த 10 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசு நிறைவேற்றி இருக்கிறதா? என்றும் இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், இங்கிருந்து பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவதில்லை. அது உறுதி. அவர்கள் வாஷ் அவுட். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி நடைபெற்றதோ அப்படி தான் நடக்கப்போகிறது அதில் எந்த மாற்றமும் இல்லை. குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றி பெற்றாலும் அது பாஜக எம்எல்ஏ தான் என குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் அப்பட்டமாக, பொய் சொல்கிறார். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தேன் என்று சொல்கிறார். அவர் படிப்படியாகவா வந்தார்? ஊர்ந்து வந்தார், தவழ்ந்து வந்தார். நான் உழைத்து வந்தேன் என்பது இங்கிருக்கும் நம்முடைய தொண்டர்களை கேட்டால் சொல்வார்கள். அதிமுக ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், ரவுடியிசங்களை பட்டியலிட்டு சொல்ல தொடங்கினால், நேரம் போதாது என தெரிவித்துள்ளார்.
சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் அதிமுக ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?. இது திராவிட மண், உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. தமிழருடைய சுயமரியாதை, தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், இழந்திருக்கும் உரிமையை மீட்க வேண்டும் என்றால், திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…