லீ மெரீடியன் ஹோட்டலை எம்.ஜி.எம். கையகப்படுத்த தடை..!

லீ மெரீடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் சென்னை மற்றும் கோவையில் லீ மெரீடியன் ஓட்டல்களை நடத்தி வருகிறது. அப்பு ஹோட்டல்ஸ் இந்திய சுற்றுலாக்கழகத்த்திற்கு தர வேண்டிய ரூ.18 கோடியை செலுத்தாததால் வராக்கடனாக அறிவிக்கப்பட்டது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில்,3 நிறுவனங்கள் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தை வாங்க முன்வந்தனர். அதில், எம்.ஜி.எம். நிறுவனம் சார்பில் ஒப்படைக்கப்பட்ட ரூ.423 கோடி சொத்துக்கள் மற்றும் நிர்வாகத்தை எம்.ஜி.எம். நிறுவனம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய அனுமதியை எதிர்த்து லீ மெரீடியன் மேல்முறையீடு செய்தது.
அதில், லீ மெரீடியன் சொத்து மதிப்பீடு தவறாக கணக்கிடப்பட்டு உள்ளதாகவும் ரூ.1,600 கோடி மதிப்பு சொத்தை எம்.ஜி.எம். நிறுவனம் ரூ.423 கோடிக்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லீ மெரீடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025