சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.. அமைச்சர் சேகர் பாபு பேட்டி.!

Sekarbabu Chidambaram

சிதம்பரம் நடராஜர் கோயில் வழிபாட்டு விவகாரத்தில், தீட்சிதர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில், தீட்சிதர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் கனகசபை விவகாரத்தில் அறநிலையத்துறை முடிவு செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையும் கனகசபை மீது வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தீட்சிதர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் இது போன்று தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி மறுத்து பலகை வைத்துள்ளது. இது குறித்து தீட்சிதர்கள் மீது, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

முன்னதாக இந்துசமய அறநிலையத்துறை செயலர் சரண்யா, தீட்சிதர்கள் வைத்த அனுமதியில்லை என்ற பலகையை அகற்ற முயன்றபோது, மிரட்டும் பாணியில் நடந்து கொண்டதாகவும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை  உதவியுடன் அனுமதி பலகையை அகற்ற முயலும்போதும் பனி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது, உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்