சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Default Image

மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட இணைந்து நிற்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.

இந்த நிலையில், இயல்பு வாழ்கை திரும்பிட இணைந்து நிற்போம் என்று பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதினாறாவது சடடமன்ற பேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

கொரோனா பேரிடரிலிருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணி. நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு முழுமையான அர்ப்பணிப்புடன், போர்க்கால அடிப்படையில் செயலாற்றி வருகிறது. அரசு அதிகாரிகள், முன்கள பணியாளர்கள், காவல்துறையினர் என பல தரப்பினரும் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகிறார்கள்.

மேலும், சமூக நல ஆர்வலர்களும், தொழில் நிறுவனத்தாரும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவிக்கரம் அளித்து வருகின்றனர். அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் உதவிகளை மேற்கொண்டு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு உடனடி நடவடிக்கையினை – உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை மீட்பதற்கு ஆளும் கட்சி, எதிர் கட்சி, தோழமை கட்சி என்பதை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம் என்றும் மக்களின் இயல்பு வாழ்கை திரும்பிட அனைவரும் இணைந்து நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war