Chennai HIgh Court [Image source : Wikipedia]
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரோமஷன் பணிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகின்ற 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம், ஆனால் 5 காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவன தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஏற்கனவே, ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்து இருந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…