ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்களுக்காக பாடங்கள் அனைத்தும் இன்று முதல் ஸ்வயம் பிரபா சேனல் மூலம் ஒளிப்பரப்பப்படவுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் அவதிப்படும் மாணவர்களுக்காக ஆப்லைன் வடிவில் பாடங்களை வழங்குவதற்கான முயற்சியை சென்னை ஐ. ஐ. டி எடுத்துள்ளது.
அதன்படி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களின் பாடங்களில் முக்கியமானவற்றை மட்டும் 300 மணி நேர காலளவில் வீடியோவாக சென்னை ஐ. ஐ. டி மற்றும் பல்வேறு மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வீடியோவாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பாட தொகுப்பை இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 1ம் தேதி வரை மத்திய அரசின் ஸ்வயம் பிரபா கல்வி சேனல் மூலம் ஒளிப்பரப்பவுள்ளனர் . ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் இந்த சேனலில் ஒளிப்பரப்பப்படும் வீடியோவை பார்க்குமாறும், தினமும் ஒளிப்பரப்படும் பாடங்களின் அட்டவணையை http://www.swayamprabha.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை ஐ. ஐ. டி தெரிவித்துள்ளது.
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…