உள்ளாட்சி தேர்தல் : 2 நாட்களில் 5,001 பேர் வேட்புமனு தாக்கல்

Published by
Venu
  • தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
  • ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 நாட்களில் 5,001 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.நேற்று ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 நாட்களில் 5,001 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில்,ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று  ஒரே நாளில் 1784 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 1456, கிராம ஊராட்சி தலைவர் – 288, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – 38 ,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 2 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல்  டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

31 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago