உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

- தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
- உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதனை தொடர்ந்து 27 ஆம் தேதி முதல்கட்ட வாக்கு பதிவும்,30-ஆம் தேதி 2-ஆம் கட்ட வாக்கு பதிவும் நடைபெற்றது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025