தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக அறிவித்தது.
இந்நிலையில் பெரம்பலுர் -அரியலூர் சாலையில் உள்ள சித்தளி அருகே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுகள் கொட்டப்பட்டு இருந்தன. அந்த இளஞ்சிவப்பு சீட்டுகள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய பயன்படுத்தப்படும் வாக்கு சீட்டு .
இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த வாக்குச்சீட்டுகளை சேகரித்தனர்.பொதுவாக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகளை ஆறு மாதம் வரை பாதுகாக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
அப்படியிருக்கையில் தேர்தல் முடிந்த அடுத்த மறுநாளே வாக்குச்சீட்டுகள் ரோட்டோரத்தில் சிதறி கிடப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் சிதறிக்கிடந்த வாக்கு சீட்டுகள் வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணப்பட்டதா..? அல்லது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திருடப்பட்டு ரோட்டோரத்தில் வீசப்பட்டதா..? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…